/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
கோதவாடி மாரியம்மன் கோவிலில் சேதமடைந்த மண்டபம் அகற்றம்; 'தினமலர்' செய்தி எதிரொலி
/
கோதவாடி மாரியம்மன் கோவிலில் சேதமடைந்த மண்டபம் அகற்றம்; 'தினமலர்' செய்தி எதிரொலி
கோதவாடி மாரியம்மன் கோவிலில் சேதமடைந்த மண்டபம் அகற்றம்; 'தினமலர்' செய்தி எதிரொலி
கோதவாடி மாரியம்மன் கோவிலில் சேதமடைந்த மண்டபம் அகற்றம்; 'தினமலர்' செய்தி எதிரொலி
PUBLISHED ON : மே 30, 2024 12:00 AM

கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு அருகே, கோதவாடி மாரியம்மன் கோவிலில் சேதமடைந்த முன் மண்டபம், 'தினமலர்' நாளிதழில் வெளியான செய்தி எதிரொலியாக, அகற்றம் செய்யப்பட்டுள்ளது.
கிணத்துக்கடவு, கோதவாடி ஊராட்சியில் உள்ள மாரியம்மன் கோவில், 100 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்தது. இந்த கோவில் ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கோவிலின் முன் மண்டபம் கடந்த சில வருடங்களாக சேதம் அடைந்த நிலையில் இருந்தது.
இதை கவனித்த அப்பகுதி மக்கள், ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் தொல்லியல் துறைக்கு தெரிவித்தனர். கோவிலை ஆய்வு செய்த அதிகாரிகள் சீரமைப்பு பணிகளுக்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.
ஆனால், கடந்த, 21ம் தேதி, இரவு கோவில் முன் மண்டபம் சேதம் அடைந்தது. இதை தொடர்ந்து, ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு மக்கள் மீண்டும் தகவல் தெரிவித்தனர். 'தினமலர்' நாளிதழில் கோவில் மண்டபம் சேதமடைந்தது குறித்து படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.
அதன்பின், கோவில் முன் மண்டபத்தை அதிகாரிகள் பார்வையிட்டனர். அப்போது ஊராட்சி தலைவர் மற்றும் அப்பகுதி மக்கள், மண்டபத்தை அகற்ற வேண்டும் என வலியுறுத்தினர். இதையடுத்து, கோவில் முன் மண்டபம் அகற்றப்பட்டுள்ளது.
'தினமலர்' நாளிதழில் வெளியான செய்தியை தொடர்ந்து, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தற்கு, மக்கள் நன்றி தெரிவித்தனர். முன் மண்டபம் அகற்றப்பட்டதால், அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.