/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
பயணியர் நிழற்கூரையில் போஸ்டர்கள் அகற்றம்; 'தினமலர்' செய்தி எதிரொலி
/
பயணியர் நிழற்கூரையில் போஸ்டர்கள் அகற்றம்; 'தினமலர்' செய்தி எதிரொலி
பயணியர் நிழற்கூரையில் போஸ்டர்கள் அகற்றம்; 'தினமலர்' செய்தி எதிரொலி
பயணியர் நிழற்கூரையில் போஸ்டர்கள் அகற்றம்; 'தினமலர்' செய்தி எதிரொலி
PUBLISHED ON : ஆக 07, 2024 12:00 AM

வால்பாறை : வால்பாறை காந்திசிலை பஸ் ஸ்டாண்ட், தற்காலிக பஸ் ஸ்டாண்டாக செயல்படுகிறது. அனைத்து எஸ்டேட்களுக்கும், அரசு பஸ்கள் இங்கிருந்து தான் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், பயணியர் வசதிக்காக கட்டப்பட்டுள்ள நிழற்கூரை முழுவதும் விளம்பர போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. இதனால், நிழற்கூரை அலங்கோலமாக காட்சியளித்தது.இதுகுறித்து, 'தினமலர்' நாளிதழில் நேற்று முன்தினம் செய்தி வெளியிடப்பட்டது. இதனையடுத்து, வால்பாறை நகராட்சி கமிஷனர் விநாயகம் உத்தரவின் பேரில், நகராட்சி பணியாளர்கள், காந்திசிலை வளாகத்தில் உள்ள பயணியர் நிழற்கூரையில் விதிமுறை மீறி ஒட்டியிருந்த போஸ்டர்களை அகற்றினர்.
பயணியர் நிழற்கூரை மற்றும் பொது இடங்களில், அரசியல் கட்சியினர், வர்த்தக நிறுவனத்தினர், அத்துமீறி போஸ்டர் ஒட்டுவதை தடுக்கும் வகையில், நகராட்சி அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.