/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
ராமநாதபுரத்தில் ரோடு ஆக்கிரமிப்பு அகற்றம் * தினமலர் செய்தி எதிரொலி
/
ராமநாதபுரத்தில் ரோடு ஆக்கிரமிப்பு அகற்றம் * தினமலர் செய்தி எதிரொலி
ராமநாதபுரத்தில் ரோடு ஆக்கிரமிப்பு அகற்றம் * தினமலர் செய்தி எதிரொலி
ராமநாதபுரத்தில் ரோடு ஆக்கிரமிப்பு அகற்றம் * தினமலர் செய்தி எதிரொலி
PUBLISHED ON : மே 07, 2024 12:00 AM

ராமநாதபுரம்: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக ராமநாதபுரம் அரண்மனை கோட்டை விநாயகர் கோயில், பவுண்ட் கடை வீதியில் ரோடு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
ராமநாதபுரம் நகரின் மெயின் பஜாராக உள்ள அரண்மனை ரோடு, சாலைத்தெரு, கோட்டை விநாயகர் கோயில் ரோடு, அல்லிக்கண்மாய் ரோடு, பவுண்ட் கடை வீதி உள்ளிட்ட இடங்களில் அளவிற்கு அதிகமாக நடை பாதைகளை ஆக்கிரமித்துள்ளனர்.
இதனால் நடுரோட்டில் மக்கள் நடந்து செல்கின்றனர். வேகமாக வரும் வாகனங்களால் விபத்து அபாயம் உள்ளது. பாதி ரோட்டை காணோம் என தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.
இதையடுத்து எஸ்.பி., சந்தீஷ் உத்தரவின் பேரில் போக்குவரத்து போலீஸ் எஸ்.ஐ., விக்னேஷ் தலைமையிலான போலீசார் மேற்கண்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். அனுமதிக்கப்பட்ட நேரங்களில் மட்டுமே சரக்கு வாகனங்கள் வர வேண்டும் என போலீசார் எச்சரிக்கை செய்தனர்.