/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
குன்றத்தில் கிரிவலப்பாதை ரூ.2 கோடியில் சீரமைப்பு * தினமலர் செய்தி எதிரொலி

PUBLISHED ON : ஆக 07, 2024 12:00 AM

திருப்பரங்குன்றம் : தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக திருப்பரங்குன்றம் கிரிவலப் பாதை ரூ. 2 கோடியில் சீரமைக்கப்பட உள்ளது.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ள மலையைச் சுற்றி 3.25 கி.மீ., கிரிவல ரோடு உள்ளது.
இப்பகுதியினர் தினமும் பல நுாறு பேர் இப்பாதையில் நடைப்பயிற்சி மேற்கொள்வர். பவுர்ணமிதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இப்பாதையில் கிரிவலம் செல்வர்.
இந்த ரோடு 10 ஆண்டுகளுக்கும் மேலாக சீரமைக்கப்படாமல் சேதமடைந்து உள்ளது. அவ்வப்போது 'பேட்ச் ஒர்க்' மட்டும் பார்க்கப்பட்டது. ரோடு சரியில்லாததால் வாகனங்களும், பொதுமக்களும் இதனைப் பயன்படுத்த சிரமப்படுகின்றனர். இது குறித்து தினமலர் நாளிதழில் பலமுறை செய்தி வெளியானது. இதையடுத்து கிரிவலப் பாதையை சீரமைக்க ரூ. 2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மண்டல தலைவர் சுவிதா கூறுகையில், ''கிரிவல ரோட்டின் இருபுறமும் பக்தர்கள், பொதுமக்கள் நடந்து செல்ல பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட உள்ளது. கிரிவல ரோட்டில் சேதமடைந்துள்ள அனைத்து பகுதிகளும் சீரமைக்க பட உள்ளது'' என்றார்.