/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
சீரமைக்கப்பட்ட குழாய்கள் நடமாடும் மக்கள் நிம்மதி: 'தினமலர்' செய்தி எதிரொலி

PUBLISHED ON : செப் 03, 2024 12:00 AM

கோத்தகிரி;கோத்தகிரி கட்டபெட்டு பஜார்; குன்னுார் பஸ் நிறுத்தம் இடையே, தாறுமாறாக பொருத்தப்பட்ட குழாய்கள் சீரமைக்கப்பட்டதால், மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
கக்குச்சி, நடுஹட்டி மற்றும் ஜெகதளா ஊராட்சிகளின் எல்லையில் அமைந்துள்ள கட்டபெட்டு பஜாரில் இருந்து, குன்னூர் பஸ் நிறுத்தம் செல்வதற்கு நடைபாதை அமைந்துள்ளது.
பள்ளி மாணவர்கள், பயணிகள் உட்பட, கிராமங்களுக்கு செல்பவர்கள், இந்த நடைபாதையை பயன்படுத்தி வருகின்றனர். சேதமடைந்த படிக்கட்டுகளில், குறுக்கே தாறுமாறாக தண்ணீர் குழாய்கள் பொருத்தப்பட்டிருந்தது.
இதனால், பலர் தடுக்கி விழுந்து, காயமடைந்து வந்தனர். இது குறித்து, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அடுத்து தண்ணீர் குழாய்கள் ஒழுங்குப்படுத்தப்பட்டதுடன், நடைபாதை படிக்கட்டுகள் சீரமைக்கப்பட்டதால், நீண்ட நாட்களாக, சிரமத்தை சந்தித்து வந்த மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.