/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
சென்றாயன்பாளையத்தில் சாலை சீரமைப்பு
/
சென்றாயன்பாளையத்தில் சாலை சீரமைப்பு
PUBLISHED ON : மே 11, 2024 12:00 AM

திருவள்ளூர்:'நம் நாளிதழ்' செய்தி எதிரொலியாக, பூண்டி-சென்றாயன்பாளையம் சாலை சீரமைக்கப்பட்டுள்ளது.
பூண்டி ஒன்றியம், சென்றாயன்பாளையம், திருப்பேர், வழியாக ராமஞ்சேரிக்கு திருவள்ளூரில் இருந்து அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.
இவ்வழியாக, 15க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இவர்கள், கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிக்கும் திருவள்ளூர் வந்து செல்ல வேண்டும்.
திருப்பேர் கூட்டு சாலையில் இருந்து பூண்டி வரை, வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சாலை வழியாக வந்து செல்கின்றனர். இச்சாலை குண்டும், குழியுமாக இருப்பதால், பேருந்து மற்றும் கார், பைக் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாமல் சிரமப்பட்டு வந்தனர்.
மக்களின் கோரிக்கை ஏற்று, நெடுஞ்சாலை துறையினர், 3.45 கி.மீட்டர் துாரத்திற்கு, 2 கோடி ரூபாய் மதிப்பில் சாலை அமைக்கும் பணி, கடந்த மூன்று மாதத்திற்கு முன் துவக்கினர்.
ஒன்றரை கி.மீட்டர் துாரம் தார்ச் சாலை அமைத்த நிலையில், மீதம் உள்ள பகுதியில், ஜல்லி கற்கள் கொட்டி வைத்தும் பணி துவங்கவில்லை.
இதுகுறித்து, 'நம் நாளிதழில்' செய்தி வெளியானது. இதையடுத்து, தார்ச்சாலை அமைக்கப்பட்டது. இதனால், கிராமவாசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.