/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
டால்பின்நோஸ் பார்க்கிங் கட்டண பிரச்னைக்கு தீர்வு தினமலர் செய்தி எதிரொலி
/
டால்பின்நோஸ் பார்க்கிங் கட்டண பிரச்னைக்கு தீர்வு தினமலர் செய்தி எதிரொலி
டால்பின்நோஸ் பார்க்கிங் கட்டண பிரச்னைக்கு தீர்வு தினமலர் செய்தி எதிரொலி
டால்பின்நோஸ் பார்க்கிங் கட்டண பிரச்னைக்கு தீர்வு தினமலர் செய்தி எதிரொலி
PUBLISHED ON : ஏப் 18, 2024 12:00 AM

குன்னுார் : குன்னுார், டால்பின்நோஸ் காட்சிமுனையில் வாகன 'பார்க்கிங்' கட்டண கொள்ளையில் ஈடுபட்டு வந்த நிலையில், 'தினமலர்' செய்தி எதிரொலியால் தீர்வு காணப்பட்டது.
குன்னுார் டால்பின்நோஸ் காட்சிமுனைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு, செல்லும் வாகனங்களுக்கு பர்லியார் ஊராட்சி சார்பில், டெண்டர் விடப்பட்டு பார்க்கிங் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பர்லியார் ஊராட்சி சார்பில், கட்டணம் நிர்ணயம் செய்து, நான்கு சக்கர வாகனங்களுக்கு, 20 ரூபாய், இருசக்கர வாகனங்களுக்கு, 10 ரூபாய், மேக்சி கேப் வாகனங்களுக்கு 30 ரூபாய் வசூலித்தது. தற்போது, தனியாருக்கு, 15 லட்சம் ரூபாய்க்கு டெண்டர் விடப்பட்டு, 20 ரூபாய், 30, 50 ரூபாய் என முறையே வசூலிக்க கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. இதற்கான அறிவிப்பு போர்டுகள் எதுவும் வைக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், நான்கு சக்கர வாகனங்களுக்கு, 70 ரூபாய், மேக்சி கேப் வாகனங்களுக்கு, 120 ரூபாய் வரை வசூலிக்கப்பட்டது. இது தொடர்பாக சுற்றுலா டிரைவர்கள் மிகவும் அதிருப்தி அடைந்தனர்.
இது தொடர்பான செய்தி 'தினமலர்' நாளிதழில் 15ம் தேதி வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து, நீலகிரி மாவட்ட நிர்வாகம் உத்தரவின் பேரில், குன்னுார் வருவாய் துறையினர் மற்றும் பர்லியார் பஞ்சாயத்து நிர்வாகத்தினர் நேரடியாக ஆய்வு செய்தனர்.
அங்கு கட்டண விபர போர்டு வைத்ததுடன், கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.

