/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
ஸ்ட்ரெச்சர் பற்றாக்குறை தீர்க்கப்படும் * தினமலர் செய்தி எதிரொலி
/
ஸ்ட்ரெச்சர் பற்றாக்குறை தீர்க்கப்படும் * தினமலர் செய்தி எதிரொலி
ஸ்ட்ரெச்சர் பற்றாக்குறை தீர்க்கப்படும் * தினமலர் செய்தி எதிரொலி
ஸ்ட்ரெச்சர் பற்றாக்குறை தீர்க்கப்படும் * தினமலர் செய்தி எதிரொலி
PUBLISHED ON : ஏப் 16, 2024 12:00 AM

மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வீல்சேர், ஸ்ட்ரெச்சர் பற்றாக்குறை உள்ள நிலையில் மருத்துவக்கருவி, பிற உபகரணங்களை கொண்டு செல்ல பயன்படுத்துவதாக நேற்று தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.
இதையடுத்து மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் சாலி தளபதி டீன் ரத்தினவேலிடம் விளக்கம் கேட்டார்.
டீன் விளக்கம்: மருத்துவமனையின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் ரூ.334 கோடி மதிப்பில் 6 புதிய கட்டடங்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டன.
புதிதாக திறக்கப்பட்ட கட்டடங்களில் பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளது.
நோயாளிகளுக்கு சிரமம் ஏற்படாத வகையில் தற்காலிக பணியாளர்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நிரந்தர தீர்வு காண போதிய பணியாளர்கள் நியமிக்கப்படுவர்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.