/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
புதிய வேகத்தடைகளில் குறியீடுகள் போட்டாச்சு 'தினமலர்' செய்தி எதிரொலி

PUBLISHED ON : ஆக 06, 2024 12:00 AM

உடுமலை: தாராபுரம் மாநில நெடுஞ்சாலையில், புதிய வேகத்தடைகளில் குறியீடு இல்லாதது குறித்து, 'தினமலர்' செய்தி எதிரொலியாக நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பொள்ளாச்சி - தாராபுரம் மாநில நெடுஞ்சாலையில், உடுமலை உட்கோட்ட பராமரிப்பிலுள்ள, கொங்கல்நகரம் நால்ரோடு, அரசு உயர்நிலைப்பள்ளி, சோமவாரப்பட்டி நடுநிலைப்பள்ளி அருகே உள்ளிட்ட இடங்களில், புதிதாக வேகத்தடை அமைக்கப்பட்டது.
விபத்துகளை குறைக்க அமைக்கப்பட்ட வேகத்தடையில், குறியீடுகள் எதுவும் இல்லாததால், வாகன ஓட்டுநர்கள் விபத்துக்குள்ளானார்கள். இது குறித்து, 'தினமலரில்', செய்தி வெளியானது. இதையடுத்து, புதிதாக அமைக்கப்பட்ட வேகத்தடைகள் இருப்பது வாகன ஓட்டுநர்களுக்கு தெரியும் வகையில், வெள்ளை வர்ணம் பூசியுள்ளனர்.
மேலும், ரிப்ளக்டர்கள் பொருத்துவதற்கான பணிகளையும் நெடுஞ்சாலைத்துறையினர் துவக்கியுள்ளனர்.