/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
செய்தி எதிரொலி வடகால் அரசு துவக்க பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டும் பணி தீவிரம்

PUBLISHED ON : ஜூன் 24, 2024 12:00 AM

மறைமலை நகர்:
காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஆத்துார் ஊராட்சி வடகால் கிராமத்தில், 350க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயில்கின்றனர்.
இந்த பள்ளி வளாகத்தில், மூன்று பக்கங்கள் மட்டுமே சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு, ஒரு பக்கம் சுற்றுச்சுவர் இல்லாமல் திறந்தவெளியாக இருந்தது.
இதன் காரணமாக, கால்நடைகள், தெரு நாய்கள் நடமாட்டம் பள்ளி வளாகத்தில் அதிகரித்தது. மேலும் திறந்தவெளியாக இருந்த இடத்தில் கழிவு நீர் தேங்கி, நோய் தொற்று அபாயம் ஏற்படும் வகையில் இருந்தது.
இது குறித்து, நம் நாளிதழில், கடந்த 14ம் தேதி படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து, பள்ளி வளாகத்தை ஆய்வு செய்த அதிகாரிகள், தேங்கி இருந்த கழிவு நீரை அப்புறப்படுத்தி, விடுபட்ட பகுதியில் சுற்றுச்சுவர் அமைக்க உத்தரவிட்டனர்.
தற்போது, கழிவுநீர் அகற்றப்பட்டு, சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.