/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
‛தினமலர்' செய்தி எதிரொலி மலைகோவில் சாலையில் பள்ளங்கள் சீரமைப்பு
/
‛தினமலர்' செய்தி எதிரொலி மலைகோவில் சாலையில் பள்ளங்கள் சீரமைப்பு
‛தினமலர்' செய்தி எதிரொலி மலைகோவில் சாலையில் பள்ளங்கள் சீரமைப்பு
‛தினமலர்' செய்தி எதிரொலி மலைகோவில் சாலையில் பள்ளங்கள் சீரமைப்பு
PUBLISHED ON : அக் 25, 2024 12:00 AM

திருத்தணி:திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு செல்லும் மலைப்பாதை நுழைவு வாயிலில் நெடுஞ்சாலை துறையினர் மின்விளக்குகள் அமைப்பதற்கு தோண்டிய பள்ளத்தை சீரமைக்காமல் பல மாதங்களாக மெத்தனம் காட்டி வந்தனர்.
மேலும் அரக்கோணம் சாலையில் இருந்து பேருந்து நிலையத்திற்கு திரும்பும் பகுதியில் நெடுஞ்சாலையில் பள்ளம் ஏற்பட்டிருந்தது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி தவறி விழுந்து படுகாயம் அடைந்து வந்தனர்.
இதுதவிர, நெடுஞ்சாலையில் நடந்து செல்பவர்களும் பள்ளத்தில் தவறி விழுந்து வந்தனர். இது குறித்து நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து திருத்தணி நெடுஞ்சாலை துறையின் கோட்டப் பொறியாளர் ரகுராமன் மற்றும் ஊழியர்கள் ஆய்வு செய்து, பள்ளங்களை தார் மற்றும் ஜல்லி கலந்து சீரமைத்தனர். இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.