/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
தலைநிமிர்ந்த 'சிசிடிவி'க்கள் கொளத்துாரில் நடவடிக்கை
/
தலைநிமிர்ந்த 'சிசிடிவி'க்கள் கொளத்துாரில் நடவடிக்கை
தலைநிமிர்ந்த 'சிசிடிவி'க்கள் கொளத்துாரில் நடவடிக்கை
தலைநிமிர்ந்த 'சிசிடிவி'க்கள் கொளத்துாரில் நடவடிக்கை
PUBLISHED ON : ஆக 06, 2024 12:00 AM

மறைமலை நகர்:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், கொளத்துார் ஊராட்சியில், கொளத்துார், வெண்பாக்கம் ஆகிய இரண்டு கிராமங்கள் உள்ளன. இங்கு, 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இங்கு, ஊராட்சி நிர்வாகம் சார்பில், கடந்த 2022ம் ஆண்டு, தெள்ளிமேடு - ரெட்டிப்பாளையம் சாலையில், கொளத்துார் சந்திப்பு மற்றும் வெண்பாக்கம் முருகன் கோவில் அருகில், கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டன.
இதன் வாயிலாக பதிவாகும் காட்சிகள், ஊராட்சி அலுவலகத்தில் இருந்து கண்காணிக்கப்பட்டு வந்தன. இந்த கேமராக்கள் வாயிலாக, பாலுார் போலீசார் குற்றவாளிகளை கண்காணிக்க வசதியாக இருந்து வந்தது.
இந்நிலையில், கொளத்துார் சந்திப்பில் உள்ள கேமராக்கள் உடைந்து, தலை கவிழ்ந்து காணப்பட்டது. இதனால், இந்த பகுதியில் குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை கண்காணிப்பதில், போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டது.
இந்த கேமராக்களை பழுது நீக்கி, மீண்டும் முறையாக அமைக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இது குறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.
அதைத்தொடர்ந்து, உடைந்து தொங்கிய கேமராக்களை, ஊராட்சி நிர்வாகம் சார்பில் பழுது நீக்கம் செய்யப்பட்டு, மீண்டும் அதே பகுதியில் பொருத்தப்பட்டு உள்ளன.