உள்ளடக்கத்திற்கு செல்ல
PUBLISHED ON : ஏப் 08, 2026 05:13 AM
அ நிறம் | அளவு
பாலமேடு: அலங்காநல்லுார் ஒன்றியம் டி.மேட்டுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 2024 ஜூனில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் 800 மீட்டர் சுற்றுச்சுவர் கட்ட ரூ.41 லட்சம் ஒதுக்கப்பட்டது.
முன்பக்க சுற்றுச்சுவரை ஒப்பந்ததாரர் அகற்றியதால் தெரு நாய்கள் பள்ளி வளாகத்திற்குள் கூட்டம், கூட்டமாக வந்து சென்றன. மரத்தடியில் அமர்ந்து மாணவர்கள் படிக்க, சாப்பிட முடியாமல் சிரமப்பட்டனர். சுற்றுச்சுவர் கட்டுமான பணி 10 மாதங்களுக்கும் மேல் கிடப்பில் போடப்பட்டது குறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. உடனே அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டதால் பள்ளி சுற்றுச்சுவர் கட்டும் பணி நடந்து வருகிறது.
