/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
ஒரு மாதத்திற்கு பிறகு ஆவின் பால் ஊக்கத் தொகை; தினமலர் செய்தி எதிரொலி
/
ஒரு மாதத்திற்கு பிறகு ஆவின் பால் ஊக்கத் தொகை; தினமலர் செய்தி எதிரொலி
ஒரு மாதத்திற்கு பிறகு ஆவின் பால் ஊக்கத் தொகை; தினமலர் செய்தி எதிரொலி
ஒரு மாதத்திற்கு பிறகு ஆவின் பால் ஊக்கத் தொகை; தினமலர் செய்தி எதிரொலி
PUBLISHED ON : பிப் 15, 2024 12:00 AM
அன்னூர் : ஒரு மாதமாக நிலுவையில் இருந்த ஆவின் பால் ஊக்கத்தொகை நேற்று சங்கங்களுக்கு வழங்கப்பட்டது.
பால் உற்பத்தியாளர்கள், ஆவின் வழங்கும் கொள்முதல் விலை கட்டுப்படி ஆவதில்லை என தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின், கடந்த டிச. 13 ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், டிச. 18ம் தேதி முதல் பசும்பாலுக்கு லிட்டருக்கு மூன்று ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவித்தார்.
இதன்படி நான்கு லட்சம் பால் உற்பத்தியாளர்களுக்கும் டிச. 18ம் தேதி துவங்கி, ஜனவரி 10ம் தேதி வரையில் வழங்கிய பாலுக்கான ஊக்கத்தொகை ஜனவரி 11ம் தேதி வழங்கப்பட்டது.
அதன் பிறகு 33 நாட்கள் ஆகியும் அதன் பிறகு வழங்கப்பட்ட பாலுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை.
பால் உற்பத்தியாளர்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி வந்தனர். நேற்று முன் தினம் 'தினமலர்' நாளிதழில் இது குறித்த செய்தி வெளியானது. இந்நிலையில் நேற்று கோவை மாவட்டத்தில் உள்ள பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு ஆவின் தலைமையில் இருந்து ஊக்கத்தொகை அனுப்பப்பட்டது.
இதுகுறித்து கூட்டுறவு சங்க நிர்வாகிகள் கூறுகையில், ' நாளை (இன்று) பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகை அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். ஜன. 11ம் தேதி முதல், ஜன. 31ம் தேதி வரை வழங்கப்பட்ட பாலுக்கு தற்போது பணம் வந்துள்ளது,' என்றனர்.
இதுகுறித்து பால் உற்பத்தியாளர்கள் கூறுகையில்,'பிப். 10ம் தேதி வரை ஆவினுக்கு வழங்கப்பட்ட பாலுக்கும் ஊக்கத்தொகை வழங்க வேண்டும்,' என்றனர்.

