பருவநிலை மாற்றத்தால் நெல் மகசூல் பாதிக்கும் வேளாண் துறை அதிகாரிகள் தகவல்
பருவநிலை மாற்றத்தால் நெல் மகசூல் பாதிக்கும் வேளாண் துறை அதிகாரிகள் தகவல்
PUBLISHED ON : மார் 12, 2026 06:52 AM
தர்மபுரி:தர்மபுரி
மாவட்டத்தில், நடப்பு நவரை பருவத்தில் நெல் சாகு-படி பரப்பு, 29,746
அதிகரித்த நிலையில், பருவநிலை மாற்-றத்தால் மகசூல் குறைந்ததால்,
விவசாயிகள் பாதித்துள்ளனர்.
எனவே விவசாயிகளுக்கு இன்சூரன்ஸ்
காரணம் காட்டாமல், உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என, விவசாயிகளின்
கோரிக்கை குறித்து, நம் 'காலைக்கதிர்' நாளிதழில் கடந்த, 8ம் தேதியன்று
செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக, தர்மபுரி மற்றும்
நல்லம்பள்ளி வட்டா-ரத்தில் உள்ள நெல் வயல்களில், வேளாண் அறிவியல்
நிலைய விஞ்ஞானி செந்தில்குமார், தர்மபுரி வேளாண் இணை இயக்-குனர்
பழனிசாமி, துணை இயக்குனர்கள் ரத்தினம், ராஜகோபால், உதவி இயக்குனர்
(தரக்கட்டுப்பாடு) சிவசங்கரி, நல்லம்பள்ளி மற்றும் தர்மபுரி
வட்டார வேளாண் உதவி இயக்குனர்கள் சரோஜா, தினேஷ் மற்றும் நல்லம்பள்ளி
உதவி விதை அலுவலர் கோவிந்தன் ஆகியோர் அடங்கிய குழுவினர் கடந்த, 2
நாட்க-ளாக கள ஆய்வு மேற்கொண்டனர்.
இது குறித்து, வேளாண் இணை
இயக்குனர் பழனிசாமி வெளி-யிட்ட அறிக்கை: நெல் வயல்களை கள ஆய்வு
செய்தபோது, நெற்பயிர்கள் பருவம் தவறி நடவு செய்ததால், துார்கள்
குறைந்த-ளவே காணப்பட்டது. பூக்கும் பருவத்தில் பனியின் தாக்கம்
அதி-கமானதால், மகசூல் குறைய காரணமாக இருந்தது. மாவட்-டத்தில் கடந்த, 2
மாதங்களாக இரவில் கடும் குளிரும், பகலில் அதிக வெப்பமும் நிலவுவதால்,
நெற் பயிரில் மகரந்த சேர்க்கை பெரும்பாலும் பாதிக்கப்படுகிறது.
நெற்பயிரில் பூ பூக்கும் போது, வெப்பநிலை அதிகமாக இருந்தால் அது
மலட்டு தன்-மைக்கு வழிவகுத்து தானிய உற்பத்தி பாதிக்கப்படும். பகல்
நேர வெப்பநிலையை விட, இரவு நேர வெப்பநிலை பயிர்களில் அதிக சேதத்தை
ஏற்படுத்தும். தாவரங்கள் இரவில் சூடாக இருக்-கும்போது, வேகமாக
சுவாசிக்கின்றன. இதனால், வெப்பநிலை அதிகரித்து நெல் மகசூல் பாதிப்பு
அடையக்கூடும். காலநிலை மாற்றம் மற்றும் மழை பொழிவை பொருத்து மகசூல்
பாதிக்கப்-படும்.
எனவே, விவசாயிகள் உரிய பருவத்திற்கு ஏற்ற
ரகங்களை பயி-ரிட வேண்டும். மேலும், விவசாயிகள் கார், சம்பா மற்றும் நவரை
பருவத்தில், பயிர் காப்பீடு செய்து இழப்பீடு பெற்று கொள்ளலாம். நடப்பு
கார் பருவத்தில் நெற்பயிருக்கு, 427 விவ-சாயிகளுக்கு, 21.48 லட்சம்
ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது. சம்பா பருவத்தில், 2,560 ஹெக்டேர்
பரப்பளவிற்கு நெல், ராகி, நிலக்கடலை மற்றும் மக்காச்சோளம்
பயிர்களுக்கு விவசாயிகள் காப்பீடு செய்துள்ளனர்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
