/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
பயன்பாட்டுக்கு காத்திருக்கும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி
/
பயன்பாட்டுக்கு காத்திருக்கும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி
பயன்பாட்டுக்கு காத்திருக்கும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி
பயன்பாட்டுக்கு காத்திருக்கும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி
PUBLISHED ON : ஏப் 18, 2025 12:00 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், ஆதவப்பாக்கம் ஊராட்சியில், பில்லாஞ்சிமேடு, கடம்பர்கோவில், வெங்கச்சேரி ஆகிய துணை கிராமங்கள் உள்ளன.
இந்த கிராமத்தில், 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு, குடிநீர் தேவைக்காக வெங்கச்சேரி பகுதியில், புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்க, அப்பகுதிவாசிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர்.
அதன்படி, 2023 --- 24ம் நிதி ஆண்டில், 'ஜல் ஜீவன் மிஷன்' திட்டத்தின் கீழ், 27 லட்சம் மதிப்பில், 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டும் பணி துவக்கப்பட்டது. ஆனால், கட்டுமான பணி துவக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளாக பணி முடியாமல் இருந்தது.
இது குறித்த செய்தி நம் நாளிதழில் வெளியானதையடுத்து, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டும் பணி துவக்கப்பட்டது. தற்போது, கட்டுமான பணிகள் முடிவடைந்து, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பயன்பாட்டுக்கு தயாராக உள்ளது.
இது, விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வர உள்ளதாக ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.