/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
பி.என். ரோட்டில் 'பேட்ஜ் ஒர்க்': தினமலர் செய்தி எதிரொலி
/
பி.என். ரோட்டில் 'பேட்ஜ் ஒர்க்': தினமலர் செய்தி எதிரொலி
பி.என். ரோட்டில் 'பேட்ஜ் ஒர்க்': தினமலர் செய்தி எதிரொலி
பி.என். ரோட்டில் 'பேட்ஜ் ஒர்க்': தினமலர் செய்தி எதிரொலி
PUBLISHED ON : அக் 18, 2025 12:00 AM

திருப்பூர்: திருப்பூர் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து திருச்சி, மதுரை, தஞ்சாவூர் மார்க்கமாக பயணிக்கும் தீபாவளி சிறப்பு பஸ்கள், நகருக்குள் பயணிக்காமல் நல்லுார், வாவிபாளையம், நெருப்பெரிச்சல், பூலுவப்பட்டி வழியாக வந்து செல்ல வேண்டும் என போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தினர்.
சிறப்பு பஸ்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள சாலையில், பூலுவப்பட்டி, சிக்னல், நால்ரோடு உள்ளிட்ட இடங்களில் சாலை சேதமாகி குண்டும், குழியுமாக இருந்தது. சமீபத்தில் பெய்த மழையால் சாலையில் உள்ள குழியில் வாகன ஓட்டிகள் தடுமாறி விழ வாய்ப்புள்ளது. சிறப்பு பஸ் இயக்கமும் சிக்கலாகும் என 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது.
இதனை தொடர்ந்து, தெற்கு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பி.என்., ரோட்டை பார்வையிட்டு, குழிகளை சிமென்ட் கான்கிரீட் கலவை கொண்டு தற்காலிகமாக மூடும் பணியை மேற்கொண்டனர்.
'இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு பஸ்கள் சென்று வரும் வகையில் சாலை சீரமைக்கப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கப்பட்டுள்ளது; இம்மாத இறுதிக்குள் பி.என்., ரோட்டில், புதிய தார் ரோடு அமைக்கும் பணி நடக்கும்,' என நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்தனர்.