/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
குட்டையில் ரசாயன கழிவுநீர் கலப்பு; மாசுகட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வு: தினமலர் செய்தி எதிரொலி

PUBLISHED ON : செப் 23, 2025 12:00 AM
அன்னுார்: 'தினமலர்' செய்தி எதிரொலியாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் பறக்கும்படை அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.
அச்சம்பாளையம் பகுதியில் 20க்கும் மேற்பட்ட பவுண்டரிகள் உள்ளன. சில பவுண்டரிகளில் மேற்கூரை இல்லாமல் ரசாயனம் கலந்த கருப்பு மண் டன் கணக்கில் கொட்டி வைக்கப்பட்டுள்ளது.
மழை பெய்யும் போது ரசாயனம் கலந்த கருப்பு மண்ணில் விழும் நீர் கரைந்து அருகில் உள்ள மூன்று ஏக்கர் குட்டையில் கலக்கிறது.
இதனால் இப்பகுதியில் நிலத்தடி நீர் பாதிக்கப்படுகிறது. இதுகுறித்து 'தினமலர்' நாளிதழில் நேற்று படத்துடன் செய்தி வெளியானது.
இதைத் தொடர்ந்து நேற்று மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி பிரிஸ்கில்லா, பறக்கும் படை உதவி பொறியாளர் பிரபு மற்றும் அதிகாரிகள் அப்பகுதியில் உள்ள பவுண்டரிக்கு சென்றனர். பவுண்டரியில் ரசாயனம் கலந்த கருப்பு மண் திறந்த வெளியில் கொட்டப்பட்டுள்ளதா எனவும்,கம்பெனியிலிருந்து வெளியேறும் நீர் செல்லும் பாதையையும் ஆய்வு செய்தனர்.
அங்கிருந்த மண் மற்றும் தண்ணீர் மாதிரி எடுத்துச் சென்றனர். சுத்திகரிப்புக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என பவுண்டரி நிர்வாகத்திடம் விசாரித்தனர். பின்னர் அப்பகுதியில் உள்ள குட்டையில் உள்ள ரசாயன கழிவு நீரை மாதிரி எடுத்தனர். இது குறித்து அதிகாரிகள் நிருபர்களிடம் கூறுகையில், 'சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவது குறித்து தகவல் தெரிந்தால் உடனடியாக எங்களுக்கு தெரிவிக்கலாம்,' என்றனர்.