/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
சூளைமேடில் தரைப்பாலம் ஒருவழியாக பணிகள் துவக்கம் தினமலர் செய்தி எதிரொலி

PUBLISHED ON : ஏப் 15, 2025 12:00 AM

அரும்பாக்கம்,அண்ணா நகர் மண்டலம், 107வது வார்டில், சூளைமேடு மாதா கோவில் தெரு வழியாக விருகம்பாக்கம் கூவம் கால்வாய் செல்கிறது.
இந்த கால்வாயை தரைப்பாலம் பல ஆண்டுகளுக்கு முன் பெய்த கனமழையின் போது, பக்கவாட்டு தடுப்பு சுவர் இடிந்து விழுந்தது.
அதன்பின், புதிய தரைப்பாலம் அமைக்க இரண்டு முறை பூமி பூஜை உள்ளிட்டவை செய்தும், பணிகள் கிடப்பில் போடப்பட்டன. இதுகுறித்து, நம் நாளிதழில் பல முறை செய்தி வெளியிட்ட பின், புதிதாக நிதி ஒதுக்கீடு செய்து, மீண்டும் கடந்த ஜனவரியில் மாநகராட்சி பணிகள் துவங்கியது. பள்ளம் தோண்டும் பணி முடிந்த நிலையில், மீண்டும் கிடப்பில் போடப்பட்டது.
பணிகள் அரைகுறையாக விடப்பட்ட நிலையில், தரைக்கும் பாலத்திற்கு இடையே சிறிய ஏணி உதவியுடன், மக்கள் விபத்து அபாயத்தில் கடந்து வந்தனர்.
இது குறித்து, சமீபத்தில் செய்தி வெளியானதால், மீண்டும் பாலத்தை உடைக்கும் பணியை ஒருவழியாக மாநகராட்சி துவங்கியுள்ளது. பணிகளை விரைந்து முடிக்க, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.