/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
சேதமடைந்த ரேஷன் கடை கட்டடம் இடித்து அகற்றம்
/
சேதமடைந்த ரேஷன் கடை கட்டடம் இடித்து அகற்றம்
PUBLISHED ON : ஆக 03, 2025 12:00 AM

பொன்னேரி, :நம் நாளிதழில் வெளியான செய்தியின் எதிரொலியாக, சேதமடைந்த ரேஷன் கடை கட்டடத்தை இடித்து அகற்றும் பணி துவங்கியுள்ளது.
பொன்னேரி அடுத்த மெதுார் கிராமத்தில், ஊராட்சி அலுவலகத்தை ஒட்டி ரேஷன் கடை கட்டடம் சேதமடைந்து இருந்தது.
மேலும், கட்டடத்தின் பல்வேறு பகுதிகளில் விரிசல்கள் ஏற்பட்டும், கான்கிரீட் பெயர்ந்து இடிந்து விழும் அபாய நிலையிலும் உள்ளதாக, கடந்த மாதம் 17ம் தேதி நம் நாளிதழில் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக, ரேஷன் கடை கட்டடத்தை இடித்து அகற்ற, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. நேற்று, ரேஷன் கடை கட்டடத்தை இடித்து அகற்றும் பணி துவங்கியது. அதே வளாகத்தில் உள்ள உரக்கிடங்கு கட்டடத்திற்கு, ரேஷன் கடை தற்காலிகமாக மாற்றப்பட்டு உள்ளது.
புதிய கட்டடத்தை விரைவில் கட்ட வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.