உள்ளடக்கத்திற்கு செல்ல
PUBLISHED ON : ஆக 26, 2026 07:33 PM
அ நிறம் | அளவு
சோழவந்தான்: மேலக்கால் அருகே நாகமலை காலனியில் 6 மாதங்களுக்கு முன்பு குடிநீர் குழாய் பதிக்கும் பணிகளுக்காக பள்ளம் தோண்டப்பட்டது.
இதில் ரோடு சேதமடைந்து கரடு முரடாக, குண்டும் குழியுமாக மாறியது. பாதசாரிகளும், வாகனஙகளும் ரோட்டில் செல்ல முடியாமல் சிரமப்பட்டனர். இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. உடனே நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் புதிய ரோடு அமைத்தனர். இதையடுத்து அதிகாரிகள், தினமலர் இதழுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
