உள்ளடக்கத்திற்கு செல்ல
தினமலர் செய்தி எதிரொலி: சாலை மேம்பாடு பணி துவங்கியதால் மகிழ்ச்சி
தினமலர் செய்தி எதிரொலி: சாலை மேம்பாடு பணி துவங்கியதால் மகிழ்ச்சி
PUBLISHED ON : ஆக 05, 2026 05:00 PM
அ நிறம் | அளவு
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே ஜோதிபுரத்தில் உள்ள சக்தி நகர் குடியிருப்பு பகுதியில், சாலை மேம்பாடு பணிகள் துவக்கப்பட்டுள்ளன.
பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட, 3வது வார்டு செல்வம் தோட்டம் குடியிருப்பு பகுதி, சக்தி நகர், 2, 3, 4ம் வீதிகளில் சாலை மேம்பாடு பணிகள், சில மாதங்களுக்கு முன் துவக்கப்பட்டு கிடப்பில் போடப்பட்டன. மேம்பாட்டு பணியை உடனடியாக துவக்க வேண்டுமென, அப்பகுதி பொதுமக்கள் பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும், நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. இதுகுறித்து 'தினமலர்' நாளிதழில் கடந்த 1ம் தேதி செய்தி வெளியானது. இதையடுத்து, பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி நிர்வாகம், அப்பகுதியில் சாலை மேம்பாட்டு பணியை துவக்கியது. இதனால், இப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
