/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
தினமலர் செய்தி எதிரொலி பழைய நீர்த்தேக்க தொட்டி பாதுகாப்பாக இடித்து அகற்றம்

PUBLISHED ON : டிச 15, 2024 12:00 AM

பவுஞ்சூர்,:பவுஞ்சூர் அடுத்த வேட்டக்காரகுப்பம் ஊராட்சியில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
ஊராட்சிக்கு உட்பட்ட பாண்டுரங்கபுரம் பகுதியில், 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சேதமடைந்து இருந்தது.
இதையடுத்து ஊராட்சி மன்றம் சார்பாக, 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு, 6 மாதங்களுக்கு முன் பயன்பாட்டிற்கு வந்தது.
பழைய தொட்டி அகற்றப்படாமல் இருந்ததால், பலத்த காற்று வீசினால் வீடுகளின் மீது தொட்டி விழுந்து, விபத்து ஏற்படும் அபாயம் நிலவியது. இதுகுறித்து, நம் நாளிதழில் வெளியான செய்தி எதிரொலியாக, ஊரக வளர்ச்சித்துறை சார்பாக, பழைய மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி பத்திரமாக இடித்து அகற்றப்பட்டது.