/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
தினமலர் செய்தி எதிரொலி துாய்மையாகுது தெப்பக்குளம்
/
தினமலர் செய்தி எதிரொலி துாய்மையாகுது தெப்பக்குளம்
தினமலர் செய்தி எதிரொலி துாய்மையாகுது தெப்பக்குளம்
தினமலர் செய்தி எதிரொலி துாய்மையாகுது தெப்பக்குளம்
PUBLISHED ON : டிச 29, 2025 05:18 AM

திருப்பரங்குன்றம்: தினமலர் செய்தி எதிரொலியாக திருப்பரங்குன்றம் தெப்பக் குளத்தில் துாய்மைப் பணி நடக்கிறது.
ஜன. 28ல் நடக்கவுள்ள தெப்பத் திருவிழாவுக்காக, ஜி.எஸ்.டி., ரோடு பகுதியிலுள்ள தெப்பக்குளத்தில் சில தினங்களுக்கு முன்பிருந்து தண்ணீர் நிரப்பப் படுகிறது. ஏற்கனவே சிறிதளவு கிடந்த தண்ணீரில் ஏராளமான செடிகள் வளர்ந்துள்ளன.
அவற்றை அப்புறப்படுத்தி விட்டு, துாய்மை செய்த பின்பு தண்ணீர் நிரப்பினால் சுகாதாரமாக இருக்கும் என போட்டோவுடன் தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.
இச்செய்தியின் எதிரொலியாக தெப்பக்குளத்தில் கோயில் சார்பில் துாய்மை பணிகள் நடக்கிறது. இதனால் தெப்பக்குளம் புதுப்பொலிவு பெறும். பொதுமக்கள் அதிகாரிகள், தினமலர் நாளிதழுக்கு நன்றி தெரிவித்தனர்.