/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
தினமலர் செய்தி எதிரொலி கழிவுநீர் கால்வாய் பொதட்டூரில் சீரமைப்பு
/
தினமலர் செய்தி எதிரொலி கழிவுநீர் கால்வாய் பொதட்டூரில் சீரமைப்பு
தினமலர் செய்தி எதிரொலி கழிவுநீர் கால்வாய் பொதட்டூரில் சீரமைப்பு
தினமலர் செய்தி எதிரொலி கழிவுநீர் கால்வாய் பொதட்டூரில் சீரமைப்பு
PUBLISHED ON : டிச 09, 2024 12:00 AM

பொதட்டூர்பேட்டை:பொதட்டூர்பேட்டையில் இருந்து, அத்திமாஞ்சேரிபேட்டை செல்லும் சாலையில், மேல்பொதட்டூர் அருகே, கழிவுநீர் கால்வாய் ஆக்கிரமிப்பில் சிக்கி இருந்தது. இந்த வழியாக அத்திமாஞ்சேரிபேட்டை, ஆர்.கே.பேட்டை, சோளிங்கர் உள்ளிட்ட பகுதிகளுக்கு தினசரி நுாற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
ஆக்கிரமிப்பு காரணமாக, கால்வாய் துார்ந்து கழிவுநீர் திசைமாறி சாலையில் பாய்ந்து வந்தது. இந்த வழியாக செல்லும் வாகனஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். நீண்டகாலமாக சாலையில் கழிவுநீர் பாய்ந்து வந்ததால், சாலையும் சேதம் அடைந்தது.
இது குறித்த செய்தி நம் நாளிதழில் வெளியானதையடுத்து, பொதட்டூர்பேட்டை பேரூராட்சியினர், தற்போது அந்த கழிவுநீர் கால்வாயின் ஆக்கிரமிப்புகள் அகற்றினர். பின், புதிதாக கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டுள்ளது. மீண்டும் இந்த கால்வாய் ஆக்கிரமிப்பில் சிக்காமல் தொடர்ந்து பராமரிக்கப்பட வேண்டும் என, பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.