/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
தினமலர் செய்தி எதிரொலி கழிப்பறை தடுப்பு பணி துவக்கம்
/
தினமலர் செய்தி எதிரொலி கழிப்பறை தடுப்பு பணி துவக்கம்
தினமலர் செய்தி எதிரொலி கழிப்பறை தடுப்பு பணி துவக்கம்
தினமலர் செய்தி எதிரொலி கழிப்பறை தடுப்பு பணி துவக்கம்
PUBLISHED ON : அக் 09, 2025 12:00 AM

தஞ்சாவூர்:'தினமலர்' செய்தி எதிரொலியாக, ஆடுதுறை பேரூராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் கட்டப்பட்ட புதிய கழிப்பறைகளில் தடுப்பு அமைக்கும் பணி துவங்கியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், ஆடுதுறை பேரூராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில், மாணவ, மாணவியரின் பயன்பாட்டிற்காக, பள்ளி மேம்பாட்டு மானியத்தில், 34 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், புதிய சுகாதார வளாகம் கட்டப்பட்டது.
புதிய கழிப்பறைகள் வளாகம், அக். 6ம் தேதி பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது.
அதில், தடுப்புகள் இன்றி, வரிசையாக இருந்ததை பார்த்து ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்த செய்தி, அக்., 7ல், தினமலர் நாளிதழில் படத்துடன் பிரசுரமானது. இதையடுத்து, பள்ளி கல்வித்துறை உத்தரவின்படி, பேரூராட்சி நிர்வாகத்தால், கழிப்பறையில் தடுப்புகள் கட்டப்படுகின்றன.