/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
'தினமலர்' செய்தி எதிரொலி மின்மாற்றி சீரமைப்பு
/
'தினமலர்' செய்தி எதிரொலி மின்மாற்றி சீரமைப்பு
PUBLISHED ON : ஜூன் 20, 2025 12:00 AM
உத்திரமேரூர்:'தினமலர்' நாளிதழில் வெளியான செய்தியையடுத்து, கன்னிகுளத்தில் பழுதடைந்த மின்மாற்றியை, மின்வாரிய ஊழியர்கள் சரி செய்தனர்.
உத்திரமேரூர் ஒன்றியம், புலிவாய் ஊராட்சியில் மணல்மேடு, புலிவாய், கன்னிகுளம், விஜயநகர் ஆகிய துணை கிராமங்கள் உள்ளன. இந்த கிராமத்தில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது.
இங்குள்ள விளைநிலங்களுக்கு மின்சாரம் வழங்க, மின்வாரியம் சார்பில் மூன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் மின்மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில், கன்னிகுளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மின்மாற்றியின் வாயிலாக, 250 ஏக்கர் விளைநிலங்கள் நீர்பாசனம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த மின்மாற்றி இரு தினங்களுக்கு முன் பழுதடைந்தது. இதனால், இரண்டு நாட்களாக அப்பகுதியில் மின்மோட்டாரை இயக்கி, நீர்பாய்ச்ச முடியாத நிலை ஏற்பட்டது.
இது குறித்தான செய்தி நம் நாளிதழில் வெளியானதையடுத்து, பழுதடைந்த மின்மாற்றியை மின்வாரிய ஊழியர்கள் நேற்று சரி செய்தனர். இதையடுத்து, விவசாயிகள் மின்மோட்டாரை இயக்கி நேற்று முதல் விளை நிலங்களுக்கு நீர்பாய்ச்சி வருகின்றனர்.