உள்ளடக்கத்திற்கு செல்ல

தினமலர் செய்தி எதிரொலி: கோவை மாநகராட்சி இணையதளத்தில் பெயர்கள் அப்டேட்
தினமலர் செய்தி எதிரொலி: கோவை மாநகராட்சி இணையதளத்தில் பெயர்கள் அப்டேட்
PUBLISHED ON : ஜூலை 19, 2026 05:10 PM

அ நிறம் | அளவு
கோவை: மாநகராட்சி இணையதளத்தில் அனைத்து ஊழியர்கள் பிரிவில், புதிய கமிஷனர் ரவி தேஜா, துணை கமிஷனர், உதவி கமிஷனர்கள் உள்ளிட்ட அதிகாரிகளின் பெயர்களை கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக 'அப்டேட்' செய்யாமல், முந்தைய அதிகாரிகளின் பெயர்களுடன் இருந்தது.
இதுகுறித்து 14ம் தேதி நமது நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. அதன்பிறகு முன்னாள் கமிஷனர் சிவகுரு பிரபாகரன், துணை கமிஷனர் சுல்தானா ஆகியோர் பெயர்கள் நீக்கப்பட்டு, புதிய கமிஷனர், துணை கமிஷனரின் பெயர்கள் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.
மற்ற அதிகாரிகளின் பெயர்களை அப்டேட் செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக மாநகராட்சி நிர்வாகம் கூறியுள்ளது.
