உள்ளடக்கத்திற்கு செல்ல
PUBLISHED ON : ஆக 14, 2026 05:32 PM
அ நிறம் | அளவு
சோழவந்தான்: மன்னாடிமங்கலம் ஊராட்சி அய்யப்பநாயக்கன்பட்டியில் பள்ளி, குடியிருப்பு அருகே பல ஆண்டுகளாக மதுக்கடை செயல்பட்டது.
மதுப்பிரியர்கள் ரோட்டிலேயே மது அருந்திவிட்டு சண்டையிடுதல், பெண்களை கேலி செய்தல், தாறுமாறாக டூவீலர்களை ஓட்டுதல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டனர். இதனால் மாணவிகள், வேலைக்குச் செல்லும் பெண்கள் மிகுந்த சிரமமடைந்தனர். இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன்எதிரொலியாக மதுக்கடை அகற்றப்பட்டது.
