/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
'தினமலர்' செய்தி எதிரொலி அரக்கோணம் நெடுஞ்சாலை சீரமைப்பு
/
'தினமலர்' செய்தி எதிரொலி அரக்கோணம் நெடுஞ்சாலை சீரமைப்பு
'தினமலர்' செய்தி எதிரொலி அரக்கோணம் நெடுஞ்சாலை சீரமைப்பு
'தினமலர்' செய்தி எதிரொலி அரக்கோணம் நெடுஞ்சாலை சீரமைப்பு
PUBLISHED ON : ஜன 25, 2025 12:00 AM

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது உளுந்தை ஊராட்சி. இப்பகுதியில் உள்ள தண்டலம் - அரக்கோணம் நெடுஞ்சாலையில், தினமும், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த நெடுஞ்சாலையில், தண்டலம் முதல், காட்டு கூட்டுச்சாலை வரை, பல பகுதியில் சேதமடைந்து மோசமாக உள்ளது. குறிப்பாக, ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்துக்குட்பட்ட மண்ணுார், வளர்புரம் பகுதியில் நெடுஞ்சாலை பல்லாங்குழியாக மாறி, மழைநீர் குளம்போல, தேங்கியுள்ளதால், வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமவாசிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்த செய்தி, நம் நாளிதழில் வெளியானதையடுத்து, நெடுஞ்சாலைத் துறையினர், தண்டலம் - அரக்கோணம் நெடுஞ்சாலையில் சேதடைந்த பகுதியை சீரமைத்தனர்.