உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : நவ 13, 2026 04:22 PM

அ நிறம் | அளவு
கீழடி: மதுரை - பரமக்குடி 4 வழிச்சாலையில் பல இடங்களில் சாலைப் பணிகள் விடுபட்டு இருப்பதால் தினசரி விபத்து நிகழ்ந்து வருவதாக தினமலர் நாளிதழில் செய்தி வெளியானதை தொடர்ந்து விடுபட்ட இடங்களில் பணிகள் மீண்டும் தொடங்கி உள்ளன.
மதுரையில் இருந்து பரமக்குடி வரை 4 வழிச்சாலை அமைக்கப்பட்டு 8 ஆண்டு ஆன நிலையில் சாலைகள் சேதமடைந்ததால் 90 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கும் பணி பல மாதங்களாக நடந்து வருகிறது. பல இடங்களில் அரைகுறையாக பணிகள் மேற்கொள்ளப்பட்டதால் வாகனங்கள் விபத்தில் சிக்கி காயமடைந்து வருகின்றனர்.
இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானதை அடுத்து மணலூர் பாலம் உள்ளிட்ட இடங்களில் மீண்டும் தார்ச்சாலை பணிகள் நடந்து வருகின்றன.
