/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
தாலுகா அலுவலகத்தில் குடிநீர், கழிவறை தயார்
/
தாலுகா அலுவலகத்தில் குடிநீர், கழிவறை தயார்
PUBLISHED ON : அக் 13, 2025 12:00 AM

விருத்தாசலம்; 'தினமலர்' செய்தி எதிரொலியாக, விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் குடிநீர், கழிவறை வசதிகள் பயன் பாட்டிற்கு வந்தன.
விருத்தாசலம் தாலுகா அலுவலக வளாகத்தில் பட்டா, சிட்டா மாற்றம் உட்பட வட்ட வழங்கல் பிரிவு, சமூக நலன், தேர்தல், ஆதிதிராவிடர் நலன், சமூக நலன், ஆதார், இசேவை மையம், கிளைச்சிறை ஆகியன செயல் படுகின்றன.
சுற்றியுள்ள 125க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பயனாளிகள் வந்து செல்லும் நிலையில் குடிநீர், கழிவறை வசதியின்றி பொது மக்கள் மிகுந்த சிரம மடைந்தனர்.
இதையடுத்து, 5 லட்சம் ரூபாயில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் காத்திருப்புக்கூடம் கட்டி திறக்கப்பட்டது. நாளடைவில் பொதுப்பணித்துறையினர் பராமரிப்பு இல்லாமல் குடிநீர், மின்விசிறி, இருக்கை வசதிகள் பயன்பாடின்றி காட்சிப்பொருளானது. இதனைச் சுட்டிக்காட்டி, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது.
அதைத் தொடர்ந்து, வட்ட வழங்கல் பிரிவு செல்லும் வழியில் 8 லட்சம் ரூபாயில் குடிநீர் சுத்திகரிப்பு மையம் புதிதாக பொறுத்தப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது.
மேலும், தாலுகா அலுவலக பின்புறம் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியே கழிவறைகளும் புதுப்பிக்கப்பட்டது.
மேலும், கூடுதல் குடிநீர் தேவைக்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் இணைப்புகளை புதுப்பிக்கும் பணி நடந்து வரு கிறது.