/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
செயல்பாட்டிற்கு வந்தது நெல் கொள்முதல் நிலையம் விவசாயிகள் மகிழ்ச்சி
/
செயல்பாட்டிற்கு வந்தது நெல் கொள்முதல் நிலையம் விவசாயிகள் மகிழ்ச்சி
செயல்பாட்டிற்கு வந்தது நெல் கொள்முதல் நிலையம் விவசாயிகள் மகிழ்ச்சி
செயல்பாட்டிற்கு வந்தது நெல் கொள்முதல் நிலையம் விவசாயிகள் மகிழ்ச்சி
PUBLISHED ON : செப் 20, 2025 12:00 AM

சித்தாமூர்:நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக, மேலக்கண்டை ஊராட்சியில் அரசு நெல் கொள்முதல் நிலையம் துவக்கப்பட்டு, விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மதுராந்தகம் ஒன்றியம், ஜமீன் எண்டத்துார் குறுவட்டத்திற்கு உட்பட்ட மேலக்கண்டை, கீழக்கண்டை, முருகம்பாக்கம், அத்திவாக்கம் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராமங்களில், 7,000 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யப்படுகிறது.
சொர்ணவாரி பருவத்தில் பயிரிடப்பட்ட நெல், தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது.
ஆண்டுதோறும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் வாயிலாக, அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் துவக்கப்பட்டு, விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்யப்படும்.
அதன்படி, மேலக்கண்டையில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க, கடந்த 10ம் தேதி, செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது.
ஆனால், அறிவிப்பு வெளியாகி ஒரு வாரமாகியும், கொள்முதல் நிலையம் துவக்கப்பட வில்லை. இதனால், மேலக்கண்டையில் வழக்கமாக கொள்முதல் நிலையம் துவக்கப்படும் இடத்தில், 5,000க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் தேங்கின.
அடிக்கடி மழை பெய்வதால், நெல்லை பாதுகாக்க இடவசதி இல்லாமல், விவசாயிகள் தவித்து வந்தனர். இதுகுறித்து நம் நாளிதழில், விரிவான செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக நேற்று, மேலக்கண்டை ஊராட்சியில் நெல் கொள்முதல் நிலையம் துவக்கப்பட்டு, விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.