உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜூன் 26, 2026 07:07 AM

அ நிறம் | அளவு
திருப்பூர்: திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் கடந்த 20-ம் தேதி ஆய்வு நடத்திய அமைச்சர் அருண்ராஜ், கட்டடங்கள் சேதமடைந்திருப்பது குறித்துப் பொதுப்பணித்துறையினரிடம் கேள்வி எழுப்பியிருந்தார். அமைச்சர் ஆய்வு செய்து 5 நாட்களாகியும் பணிகள் நடக்கவில்லை. இதுதொடர்பாக நேற்று 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக முதல்கட்டமாகப் பிரசவ வார்டின் மேற்கூரை மற்றும் தரைத்தளத்தின் குறிப்பிட்ட சில பகுதிகளை ஊழியர்கள் சீர்செய்துள்ளனர். பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், இது நான்கு தளங்களைக் கொண்ட கட்டடம் என்பதால், இரும்புச் சாரம் கட்டி சிமென்ட் பூச்சுப் பணிகளை முழுமையாக முடிக்க 10 நாட்களாகும்; அதற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன என்றனர்.
