PUBLISHED ON : மார் 29, 2026 06:13 AM

முதுகுளத்துார்: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக முதுகுளத்துாரில் அமைக்கப்பட்ட புறவழிச்சாலை ரவுண்டானாவில் உயர்கோபுர மின் விளக்குக்கு மின் வினியோகம் வழங்கப்பட்டுள்ளது.
முதுகுளத்துார் தீயணைப்பு நிலைய அலுவலகம் அருகே இருந்து செல்வநாயகபுரம் விலக்கு ரோடு வரையும், முதுகுளத்துார் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே இருந்து நீதிமன்றம் வரை புறவழிச்சாலை அமைக்கப்பட்டது. புறவழிச்சாலையில் 4 இடத்தில் ரவுண்டானா அமைக்கப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து இருப்பதால் மக்கள் அச்சப்படுகின்றனர்.
ஒரு சில நேரங்களில் வாகனங்கள் செல்வது தெரியாமல் விபத்து ஏற்படுகிறது. கடந்த சில மாதத்திற்கு முன் ரவுண்டானாவில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது வரை எரியாமல் இருப்பதால் இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து உள்ளது.
இதுகுறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக உயர்கோபுர மின்விளக்கு மின்சப்ளை வழங்கப்பட்டுள்ளது.
இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தினமலர் நாளிதழுக்கு மக்கள் நன்றி தெரிவித்தனர்.
