தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/செய்தி எதிரொலி/ மேம்பாலத்தில் மின்விளக்குகள் அமைப்பு வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி

 மேம்பாலத்தில் மின்விளக்குகள் அமைப்பு வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி

 மேம்பாலத்தில் மின்விளக்குகள் அமைப்பு வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி


PUBLISHED ON : செப் 21, 2026 04:31 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 21, 2026 04:31 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: தினமலர் செய்தி எதிரொலி காரணமாக, விருத்தாசலம் புதுக்கூரைப்பேட்டை மேம்பாலத்தில் மின் விளக்குகள் பொறுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

கடலுார் - விருத்தாசலம் - சின்னசேலம் தேசிய நெடுஞ்சாலை (சி.வி.எஸ்., சாலை) மேம்பாட்டுப் பணியின் நிறைவடைந்து, வாகன நெரிசல் ஓரளவு குறைந்துள்ளது. இந்நிலையில், சி.வி.எஸ்., சாலையுடன் சேலம் மற்றும் குப்பநத்தம் புறவழிச்சாலைகள் இணையுமிடத்தில், புறவழிச்சாலைகளில் இருந்து வந்து பிரியும் வாகனங்களால் விபத்து அபாயம் அதிகரித்தது.

இதனைச் சுட்டிக்காட்டி, 'தினமலர்' நாளிதழில் விரிவாக செய்தி வெளியானது. இதையடுத்து, கடலுார் சாலையில் உள்ள புதுக்கூரைப்பேட்டை பஸ் நிறுத்தம் அருகில் இருந்து, வேளாண் அறிவியல் நிலையம் வரை 1 கி.மீ., தொலைவிற்கு சர்வீஸ் சாலையுடன் 37 கோடி ரூபாயில் புதிதாக மேம்பாலம் கட்டப்பட்டது.

ஆனால், மேம்பாலத்தில் மின்விளக்குகள் பொறுத்தப்படாததால் அடிக்கடி வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குவது தொடர்ந்தது. கடந்த இரு மாதங்களுக்கு முன் 30 வயது இளம்பெண் விபத்தில் சிக்கி, 20 அடி உயர மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்து இறந்தார். சில மாதங்களுக்கு முன் 40 வயது பெண் தடுப்புக்கட்டையில் மோதி இறந்தார்.

இந்த இருவேறு சம்பவங்களால் குழந்தைகள் தாயில்லாத நிலைக்கு தள்ளப்பட்டதை சுட்டிக்காட்டி, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. மேலும், விருத்தாசலம் தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரேமலதா எம்.எல்.ஏ., ஆய்வு மேற்கொண்டு, மேம்பாலத்தில் மின் விளக்குகள் பொறுத்த வேண்டும் என கலெக்டரிடம் கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து, விருத்தாசலம் - கடலுார் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தில் இருபுறமும் 60 மின் விளக்குகள் பொறுத்தும் பணி தீவிரமாக துவங்கியுள்ளது.

மின் வெளிச்சத்தால் விபத்துகள் தவிர்க்கப்படும் என்பதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us