/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
நாகை - திருத்துறைப்பூண்டி ரயில் திட்டம் 12 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் புத்துயிர்
/
நாகை - திருத்துறைப்பூண்டி ரயில் திட்டம் 12 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் புத்துயிர்
நாகை - திருத்துறைப்பூண்டி ரயில் திட்டம் 12 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் புத்துயிர்
நாகை - திருத்துறைப்பூண்டி ரயில் திட்டம் 12 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் புத்துயிர்
PUBLISHED ON : பிப் 21, 2025 12:00 AM

நாகப்பட்டினம்:நம் நாளிதழ் செய்தி எதிரொலியால், நாகை - திருத்துறைப்பூண்டி புதிய அகல ரயில் பாதை திட்டம், 12 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் துவங்குகிறது.
நாகையில் இருந்து திருக்குவளை வழியாக திருத்துறைப்பூண்டிக்கு புதிய அகல ரயில் பாதை அமைக்க, அப்போதைய மத்திய அரசிடம் ஒப்புதல் பெற்று திட்டம் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, 2009 பிப்., 27ம் தேதி, நாகை - திருத்துறைப்பூண்டி புதிய அகல ரயில் பாதை பணிக்கு, திருவாரூரில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் வேலு அடிக்கல் நாட்டி, திட்டத்தை துவக்கி வைத்தார்.
கடந்த 2011ம் ஆண்டு ஆட்சி மாற்றத்திற்கு பின், பெயரளவுக்கு நடந்த பணிகள் முற்றிலுமாக கிடப்பில் போடப்பட்டன. இருப்பினும், ஒவ்வொரு ரயில்வே பட்ஜெட்டிலும் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு, 1,050 கோடி ரூபாய் இருப்பில் உள்ளது.
இதுகுறித்து, கடந்த 11ம் தேதி, 'நாகை- - திருத்துறைப்பூண்டி வழித்தட ரயில் பாதை பணி புத்துயிர் பெறுமா?' என்ற தலைப்பில், நம் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.
இதன் எதிரொலியாக, தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்தி ரயில்வே துறைக்கு அழுத்தம் கொடுத்தது. அதில், வழித்தடம் அமைப்பதற்கான மண் எடுப்பதில் சிக்கல் இருப்பது தெரிந்தது. இதையடுத்து, மூன்று நாட்களுக்கு முன், ரயில் பாதைக்கு மண் எடுக்க, நாகை கனிம வளத்துறை அனுமதி வழங்கியது.
அதேபோல, திருவாரூர் மாவட்டத்திலும் மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால், கிடப்பில் போடப்பட்ட ரயில் பாதை திட்டத்தை, 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் துவக்குவதற்கான ஆயத்த பணிகளை, திருச்சி ரயில்வே கோட்ட நிர்வாகம் செய்கிறது.