/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
மலையாண்டவர் கோவிலுக்கு புதிய சாலை: தினமலர் செய்தி எதிரொலி
/
மலையாண்டவர் கோவிலுக்கு புதிய சாலை: தினமலர் செய்தி எதிரொலி
மலையாண்டவர் கோவிலுக்கு புதிய சாலை: தினமலர் செய்தி எதிரொலி
மலையாண்டவர் கோவிலுக்கு புதிய சாலை: தினமலர் செய்தி எதிரொலி
PUBLISHED ON : அக் 21, 2025 12:00 AM

நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலின் பழுதான மலைபாதை சாலையை புதுப்பிக்கும் பணி துவங்கியது.
நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையத்தில் மலை மீது புகழ்பெற்ற மலையாண்டவர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு வெளியூரிலிருந்து அதிகளவு பக்தர்கள் வந்து வழிபாடு செய்து வருகின்றனர்.
கோவிலுக்கு செல்லு ம் மலைபாதையில் உள்ள சாலை முழுவதும் ஜல்லிகள் பெயர்ந்து விட்டதால், பக்தர்கள், வாகன ஒட்டிகள் அவதியடைந்து வந்தனர். இதுகுறித்து 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது.
அதனைத் தொடர்ந்து, மலையாண்டவர் கோவில் மலைபாதைக்கு தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 20 லட்சம் ரூபாய் மதிப்பில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.