தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/செய்தி எதிரொலி/ சூணாம்பேடு பஜார் பகுதியில் புதிய சிறுபாலம் அமைப்பு

 சூணாம்பேடு பஜார் பகுதியில் புதிய சிறுபாலம் அமைப்பு

 சூணாம்பேடு பஜார் பகுதியில் புதிய சிறுபாலம் அமைப்பு


PUBLISHED ON : ஜன 22, 2026 06:51 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 22, 2026 06:51 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சூணாம்பேடு: நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக, சூணாம்பேடு பஜார் பகுதியில், புதிதாக சிறுபாலம் அமைக்கப்பட்டு உள்ளது.

சூணாம்பேடு ஊராட்சியில் 15,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். ஊராட்சிக்கு உட்பட்ட பஜார் பகுதியில் உள்ள முஸ்லீம் தெருவில், சாலை நடுவே 15 ஆண்டுகளுக்கு முன், சிறுபாலம் அமைக்கப்பட்டது.

கடந்த ஆண்டு, இந்த சிறுபாலத்தின் நடுவே பள்ளம் ஏற்பட்டது. இதனால், இரவு நேரத்தில் இங்கு இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி விழுந்து காயமடைந்து வந்தனர்.

இதுகுறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக, ஊரக வளர்ச்சித்துறை சார்பாக 2025 - -26ம் ஆண்டு, 15வது நிதிக்குழு மானியத்தில், 3 லட்சம் ரூபாயில் புதிதாக சிறுபாலம் அமைக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us