/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
செய்தி எதிரொலி: பாலத்தில் தடுப்பு அமைப்பு வாகன ஓட்டிகள் நிம்மதி
/
செய்தி எதிரொலி: பாலத்தில் தடுப்பு அமைப்பு வாகன ஓட்டிகள் நிம்மதி
செய்தி எதிரொலி: பாலத்தில் தடுப்பு அமைப்பு வாகன ஓட்டிகள் நிம்மதி
செய்தி எதிரொலி: பாலத்தில் தடுப்பு அமைப்பு வாகன ஓட்டிகள் நிம்மதி
PUBLISHED ON : நவ 11, 2024 12:00 AM

அச்சிறுபாக்கம்:ஒரத்தியில் இருந்து கீழ்அத்திவாக்கம் வழியாக எலப்பாக்கம், உத்திரமேரூர் செல்லும் மாநில நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலையை, 20க்கும் மேற்பட்ட கிராமத்தினர் பயன்படுத்தி வருகின்றனர்.
கீழ்அத்திவாக்கம் மேட்டு நிலப்பரப்பிலிருந்து வரும் மழைநீர், கீழ்அத்திவாக்கம் ஏரிக்கு செல்லும் வகையில், நெடுஞ்சாலையில் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கால்வாய் மீது, பாலம் அமைக்கப்பட்டது.
இந்த பாலம் சுற்றுச்சுவர் இன்றி திறந்தவெளியாக இருந்தது. சாலையோரம் தடுப்புகள் இல்லாததால், எதிரே வாகனங்கள் வரும்போது, விபத்து அபாயம் உள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, பாலத்தில் தடுப்புச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நம் நாளிதழில் செய்தி வெளியானது.
இதன் எதிராலியாக, அச்சிறுபாக்கம் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், பாலத்தின் மீது சிமென்ட் கான்கிரீட் தடுப்பு கட்டைகள் மற்றும் இரும்பு கம்பிகளால் சாலையின் இருபுறமும் தடுப்புகள் ஏற்படுத்தி உள்ளனர்.