/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
செய்தி எதிரொலி: பேருந்து நிழற்குடை திறப்பு
/
செய்தி எதிரொலி: பேருந்து நிழற்குடை திறப்பு
PUBLISHED ON : நவ 25, 2024 12:00 AM

சென்னை:சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், 471 பிரதான சாலைகள் உட்பட, ஆயிரக்கணக்கான சாலைகள் உள்ளன. அவற்றில் பயணியர் வசதிக்காக, 1,000க்கும் மேற்பட்ட இடங்களில் பேருந்து நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, 12 கோடி ரூபாய் செலவில், 81 இடங்களில், '3டி மாடல்' நவீன பேருந்து நிழற்குடை அமைக்கப்பட்டு வருகிறது.
மெரினா காமராஜர் சாலை, உழைப்பாளர் சிலை அருகே அமைக்கப்பட்ட, '3 டி' பேருந்து நிழற்குடையை, பயணியர் பயன்படுத்த முடியாமல் மூடி வைக்கப்பட்டு இருந்தது. இதனால், இப்பேருந்து நிறுத்தத்தில் பயணியர் உட்கார முடியாமல், வெகுநேரம் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதுகுறித்து, நம் நாளிதழில் புகைப்படத்துடன் செய்தி வெளியானதை தொடர்ந்து, தற்போது பேருந்து நிழற்குடை, பயணியர் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டுள்ளன. பஸ் எங்கே வருகிறது; நிறுத்தத்திற்கு எப்போது வந்தடையும் என்பது போன்ற விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.