/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
செய்தி எதிரொலி சுரங்கப்பாதையில் செல்லும் கழிவுநீருக்கு நிரந்தர தீர்வு

PUBLISHED ON : நவ 14, 2024 12:00 AM

திருத்தணி:திருத்தணி பழைய தர்மராஜாகோவில் தெரு, சதாசிவ லிங்கேஸ்வரர் கோவில் எதிரே உள்ள ரயில்வே சுரங்கப்பாதை வழியாக ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் சென்று வருகின்றனர்.
மேட்டுத் தெருவில் உள்ள தானியங்கி ரயில்வே கேட் மூடப்படும் நேரத்தில், வாகன ஓட்டிகள் அவசர தேவைக்காக சுரங்கப்பாதையில் அதிகளவில் சென்று வருகின்றனர்.
இந்நிலையில், நகராட்சி கால்வாய்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர், கடந்த மாதம் சுரங்கப்பாதையில் ஆறாக ஓடியது. இதனால், துர்நாற்றம் வீசி வருவதோடு, வாகன ஓட்டிகள் சுரங்கப்பாதையில் செல்லும் போது கடும் சிரமப்பட்டு வந்தனர்.
இதுகுறித்து நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக நகராட்சி நிர்வாகம் உடனடியாக சுரங்கப்பாதையில் கழிவுநீர் செல்லாதவாறு, மின்மோட்டார் அமைத்து, கழிவுநீர் வேறு வழியாக செல்வதற்கு ஏற்பாடு செய்தனர்.
இனிவரும் காலங்களில் சுரங்கப்பாதையில் கழிவுநீர் செல்வது நிரந்தரமாக தடுக்கப்படும் என, ஆணையர் பாலசுப்ரமணியம் தெரிவித்தார்.