/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
செய்தி எதிரொலி கோவில் குளத்தின் சுற்றுச்சுவர் சீரமைப்பு
/
செய்தி எதிரொலி கோவில் குளத்தின் சுற்றுச்சுவர் சீரமைப்பு
செய்தி எதிரொலி கோவில் குளத்தின் சுற்றுச்சுவர் சீரமைப்பு
செய்தி எதிரொலி கோவில் குளத்தின் சுற்றுச்சுவர் சீரமைப்பு
PUBLISHED ON : ஜன 19, 2025 12:00 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம் திருப்புலிவனம் கிராமத்தில், பழமை வாய்ந்த வியாக்ரபுரீஸ்வரர் கோவில் உள்ளது. ஹிந்து அறநிலையத் துறை காட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
அவ்வாறு வரும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு முன், இங்குள்ள குளத்தில் நீராடி வந்தனர். கடந்த 20 ஆண்டுகளாக குளம் முறையாக பராமரிப்பு இல்லாமலும், சுற்றுச்சுவர் இடிந்தும் இருந்தது. மேலும், குளத்தை சுற்றி செடி, கொடிகள் வளர்ந்து இருந்தது.
இதுகுறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக உடைந்திருந்த குளத்தின் சுற்றுச்சுவர் மீண்டும் கட்டப்பட்டு, வர்ணம் பூசப்பட்டு உள்ளது. மேலும், அதை சுற்றி வளர்ந்த செடி, கொடிகள் அகற்றப்பட்டுள்ளது.