/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
ஒரு வாரத்துக்குள் பொது நுாலகத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர உத்தரவு; 'தினமலர்' செய்தி எதிரொலி

PUBLISHED ON : ஏப் 12, 2025 12:00 AM

கோவை; ஐந்தாண்டுக்கு முன் கட்டப்பட்டு பயன்படுத்தப்படாமல் இருந்த நுாலக கட்டடத்தை, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் ஆய்வு செய்தார். ஒரு வாரத்துக்குள் புத்தகங்கள் கொள்முதல் செய்து, பயன்பாட்டுக்கு கொண்டு வர, கிழக்கு மண்டல அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
கோவை மாநகர் மாவட்ட தி.மு.க., செயலாளர் கார்த்திக், எம்.எல்.ஏ., வாக இருந்தபோது, ரூ.25 லட்சத்தில், பி.பி.எஸ்., காலனியில் பொது நுாலகம் கட்டினார். 2020ல் கட்டப்பட்ட இக்கட்டடம், ஐந்தாண்டுகளாகியும் பயன்பாட்டுக்கு வரவில்லை.
வளாகம் முழுவதும் புதர்மண்டி காணப்பட்டது; கதவு பூட்டுகள் துருப்பிடித்துக் காணப்பட்டன. இதுகுறித்து, நமது நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், நேரில் ஆய்வுக்கு சென்றார். நுாலக கட்டடத்தை திறந்து பார்வையிட்டார்.
முன்னதாக, புதர்மண்டியிருந்த இடங்களை, சுகாதாரப் பிரிவினர் சுத்தம் செய்தனர். கிழக்கு மண்டல தலைவர் லக்குமி இளஞ்செல்வி, உதவி கமிஷனர் முத்துசாமி உடனிருந்தனர்.
வளாகத்தை சுத்தம் செய்து, திறப்பு விழா நடத்துவதற்கு ஆலோசிக்கப்பட்டது; அங்கிருந்த அடிக்கல்லை பார்த்தபோது, ஏற்கனவே திறக்கப்பட்டு விட்டதாக எழுதப்பட்டு இருந்தது. ஆனால், புத்தகங்கள் அடுக்கி வைக்கும் அலமாரி, முழுமையாக செய்து வைக்கவில்லை.
பொதுமக்கள் அமர்ந்து படிக்க, மேஜை முழுமை அடையாமல் இருந்தது; நாற்காலிகள் இல்லை. தேவையான பணிகளை விரைந்து செய்து, ஒருவாரத்துக்குள் நுாலக வளாகத்தை சுத்தம் செய்து, தேவையான புத்தகங்கள் வாங்கி, பயன்பாட்டுக்கு கொண்டு வர, கிழக்கு மண்டல அதிகாரிகளுக்கு கமிஷனர் உத்தரவிட்டார்.