/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
செவிலிமேடில் உடைந்த குடிநீர் குழாய்கள் சீரமைப்பு
/
செவிலிமேடில் உடைந்த குடிநீர் குழாய்கள் சீரமைப்பு
செவிலிமேடில் உடைந்த குடிநீர் குழாய்கள் சீரமைப்பு
செவிலிமேடில் உடைந்த குடிநீர் குழாய்கள் சீரமைப்பு
PUBLISHED ON : டிச 26, 2025 06:10 AM

காஞ்சிபுரம்: நம் நாளிதழில் வெளி யான செய்தியை தொடர்ந்து, செவிலிமேடில் மூன்று இடங்களில் ஏற்பட்டு இருந்த குடிநீர் குழாய்கள் உடைப்பை கண்டறிந்து, மாநகராட்சி நிர்வாகத்தினர் சீரமைத்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள, 51 வார்டுகளில் வசிப்பவர்களுக்கு பாலாறு, திருப்பாற்கடல், வேகவதி ஆற்றங்கரையில் ஆழ்துளை குழாய் அமைக்கப்பட்டு, நிலத்தடியில் புதைக்கப்பட்ட குழாய் வாயிலாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
செவிலிமேடு பிரதான சாலையில் மூன்று இடங்களில், பிரதான குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, ஒரு வாரமாக குடிநீர் வீணாக சாலையில் வெளியேறி வந்தது.
இதுகுறித்து, நம் நாளிதழில் நேற்று முன்தினம் செய்தி வெளியானது. இதை தொடர்ந்து, மாநகராட்சி நிர்வாகம் சார்பில், நிலத்தடியில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் குழாய் கண்டறியப்பட்டு, சீரமைக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி நிர்வாகத்தினரால், குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்ட பகுதியை சீரமைக்க, பள்ளம் தோண்டப்பட்டதால் சேதமான சாலையை, நெடுஞ்சாலை துறையினர் சீரமைத்தனர்.

