PUBLISHED ON : ஏப் 13, 2025 12:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார் : தும்பைபட்டி பகுதி கிராமங்களில் முதியோர், ஊனமுற்றோர் உதவித்தொகை பெற தும்பைபட்டி தபால் அலுவலகம் சென்ற நிலையில் 4 கி.மீ., தொலைவில் உள்ள அட்டப்பட்டி மற்றும் பூதமங்கலம் கிராமத்திற்கு அனுப்பப்பட்டனர்.
அதனால் 6 மாதமாக பயனாளிகள் சிரமப்பட்டனர். இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக தும்பைபட்டி தபால் அலுவலகத்தில் உதவித்தொகை பெற்று வருகின்றனர்.

