உள்ளடக்கத்திற்கு செல்ல
PUBLISHED ON : ஏப் 12, 2026 03:26 AM
அ நிறம் | அளவு
மேலுார்: தும்பைபட்டியில் ரூ.5.25 லட்சத்தில் சுகாதார வளாகம் கட்டி 5 ஆண்டுகளாகியும், தண்ணீர் வசதியின்றி பூட்டி கிடந்தது. இதனால் திறந்த வெளியை கழிப் பிடமாக பயன்படுத்தும் அவலம் நிலவியது.
பயன்பாட்டிற்கு வரும் முன்பே சுவரின் சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்தன.
இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக ஊராட்சி செயலாளர் பிரபு ஏற்பாட்டில் மராமத்து, தண்ணீர் ஏற்பாடு செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
