/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
2ம் தளத்திலிருந்த வட்ட வழங்கல் பிரிவு தரைதளத்திற்கு அதிரடியாக மாற்றம்
/
2ம் தளத்திலிருந்த வட்ட வழங்கல் பிரிவு தரைதளத்திற்கு அதிரடியாக மாற்றம்
2ம் தளத்திலிருந்த வட்ட வழங்கல் பிரிவு தரைதளத்திற்கு அதிரடியாக மாற்றம்
2ம் தளத்திலிருந்த வட்ட வழங்கல் பிரிவு தரைதளத்திற்கு அதிரடியாக மாற்றம்
PUBLISHED ON : மே 02, 2025 12:00 AM
திருப்போரூர்:திருப்போரூர் வட்டத்தில் உள்ள கிராம மக்கள் பல்வேறு தேவைகளுக்காக, திருப்போரூர் தாலுகா அலுவலகம் வருகின்றனர்.
தாலுகா அலுவலகத்தில், தரை தளத்தில் சமூக பாதுகாப்பு திட்ட பிரிவு, ஆதார், இ- - சேவை மையம் ஆகியவை உள்ளன.
இரண்டாம் தளத்தில் பதிவறை, தேர்தல் பிரிவு உள்ளிட்டவை இயங்குகின்றன. அதே இரண்டாம் தளத்தில் வட்ட வழங்கல் பிரிவு அலுவலகமும் இருந்தது.
இந்நிலையில், இரண்டாம் தளத்தில் இந்த வட்ட வழங்கல் பிரிவில், புதிய குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பிக்கும் மனு மீது விசாரணை, குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை, வட்ட வழங்கல் அலுவலர் மேற்கொண்டு வந்தார்.
குடும்ப அட்டை தொடர்பான மேற்கண்ட பணிகள் காரணமாக இந்த அலுவலகத்திற்கு முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் என அனைவரும் வந்தனர்.
ஆனால், வட்ட வழங்கல் பிரிவு இரண்டாம் தளத்தில் இருந்ததால் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் படிக்கட்டில் ஏறி இறங்குவதில் சிரமப்பட்டு வந்தனர்.
எனவே, திருப்போரூர் தாலுகா அலுவலகத்தில், இரண்டாம் தளத்தில் இருந்த வட்ட வழங்கல் பிரிவை, தரை தளத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.
இதுதொடர்பாக, நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக நேற்று முன்தினம், வட்ட வழங்கல் பிரிவு அலுவலகத்தை இரண்டாம் தளத்திலிருந்து தரை தளத்திற்கு அதிரடியாக மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனால், அப்பகுதிவாசிகள் மகிழ்ச்சியடைந்து, நம் நாளிதழுக்கு நன்றி தெரிவித்து உள்ளனர்.