/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
பயன்பாட்டிற்கு வந்த மாற்றுத்திறனாளிகள் கழிப்பறை
/
பயன்பாட்டிற்கு வந்த மாற்றுத்திறனாளிகள் கழிப்பறை
PUBLISHED ON : செப் 04, 2025 12:00 AM

உத்திரமேரூர்:நம் நாளிதழில் வெளியான செய்தி எதிரொலியால், உத்திரமேரூர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில், பூட்டிக்கிடந்த மாற்றுத்திறனாளிகள் கழிப்பறை பயன்பாட்டிற்கு வந்தது.
உத்திரமேரூர் பேரூராட்சி, தோப்பு தெருவில், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, முதியோர், கர்ப்பிணியர், மாற்றுத்திறனாளிகள் உட்பட பலர் தினமும் வந்து செல்கின்றனர்.
இந்த சுகாதார மையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு என, தனி கழிப்பறை அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வந்தது.
இந்த கழிப்பறை சில மாதங்களாக பூட்டியே கிடந்தது. இதனால், சுகாதார நிலையத்திற்கு வரும் மாற்றுத்திறனாளிகள், கழிப்பறையை பயன்படுத்த முடியாமல் சிரமப்பட்டு வந்தனர்.
இது குறித்து நம் நாளிதழில் செய்தி வெளியான தையடுத்து, உத்திரமேரூர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில், பூட்டிக்கிடந்த மாற்றுத்திறனாளிகள் கழிப்பறை பயன்பாட்டிற்்கு வந்துள்ளது.