/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
எழும்பூரில் போக்குவரத்து மாற்றம் 'தினமலர்' செய்தி எதிரொலி
/
எழும்பூரில் போக்குவரத்து மாற்றம் 'தினமலர்' செய்தி எதிரொலி
எழும்பூரில் போக்குவரத்து மாற்றம் 'தினமலர்' செய்தி எதிரொலி
எழும்பூரில் போக்குவரத்து மாற்றம் 'தினமலர்' செய்தி எதிரொலி
PUBLISHED ON : ஜன 08, 2026 05:23 AM

சென்னை: நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக, எழும்பூரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை பாந்தியன் சாலை - ருக்மணி லட்சுமிபதி சாலை - ஆதித்தனார் சாலை - காவலர் சாலை என, நான்கு பிரதான சாலைகள் இணையும் இடத்தில் இரண்டு ரவுண்டானாக்கள் உள்ளன.
இந்த சந்திப்புகளில் போதுமான போக்குவரத்து போலீசார் பணியமர்த்தப்படாததாலும், சிக்னல் அமைக்காததாலும் அடிக்கடி நெரிசல் ஏற்பட்டு வந்தது.
இதனால் பாந்தியன் சாலையில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனைக்கும், தமிழ்ச்சாலையில் உள்ள அரசு குழந்தைகள் மருத்துவமனைக்கும் வரும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் நெரிசலில் சிக்கி அவதிப்பட்டு வந்தனர்.
இது குறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது. அதைத்தொடர்ந்து தற்போது போக்குவரத்து மிகுந்த நேரத்தில் நெரிசலை குறைப்பதற்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது நாளை முதல் அமலுக்கு வருகிறது.
இது குறித்து போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
ரூக்மணி லட்சுமிபதி சாலையில் காலை - மாலை என அதிக போக்குவரத்து நேரங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளன.
காலை 8:30 மணி முதல் 11:00 மணி வரை மற்றும் மாலை 5:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை ருக்மணி லட்சுமிபதி சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளன.
l பாந்தியன் ரவுண்டானா முதல் மாண்டியத் சாலை சந்திப்பு வரையிலான ருக்மணி லட்சுமிபதி சாலை ஒருவழிப்பாதையாக மாற்றப்படும்
l எத்திராஜ் சாலையில் இருந்து ருக்மணி சாலை வழியாக, எழும்பூர் நோக்கி செல்லும் வாகனங்கள் மாண்டியத் சாலையில் இடது புறம் திருப்பி அனுப்பப்படும்
l மாண்டியத் சாலை மற்றும் மாண்டியத் லேனில் இருந்து வரும் வாகனங்கள் ருக்மணி லட்சுமிபதி சாலையில் இடது புறம் திரும்ப அனுமதி கிடையாது.
போக்குவரத்து மாற்றங்களுக்கு பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் ஒத்துழைக்குமாறு போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

